சசிகலா இன்று ‘டிஸ்சார்ஜ்

 

கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துள்ள சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதயைடுத்து சசிகலா நாளை ஓசூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க உள்ளதாகவும், அங்கு தன் ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் , அதன் பின்னரே அவர் சென்னை திரும்பு நாள் முடிவாக உள்ளதாகவும் சொல்கிறார்கள். 

கடந்த 27-ந் தேதி மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் நேரில் சென்று, சிறை அதிகாரிகள், விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கி, அவரிடம் கையெழுத்து பெற்று சென்றனர். 

உடல் நிலை முன்னேற்றம் சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் கொரோனா காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெற்றார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். சசிகலா தற்போது உடல் நல பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வந்திருப்பதுடன், 

அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதை விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அண்மையில் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் விக்டோரியா மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறி இருந்தார். 

எப்போது டிஸ்சார்ஜ் இதன்படி சசிகலாவை ‘டிஸ்சார்ஜ்' செய்வது குறித்து நேற்று விக்டோரியா மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை நடத்தினார்கள். 

இந்த ஆலோசனையின் போது கொரோனா பாதிப்பு, மற்றும் உடல் நலக்குறைவில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதால், அவரை டிஸ்சார்ஜ் செய்வது என்று டாக்டர்கள் முடிவு செய்தார்கள். 

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து சசிகலாவை இன்று 31.01.2021 டிஸ்சார்ஜ் செய்வதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கொரோனா விதிமுறைகளின்படி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். டாக்டர்கள், அவருக்கு நடத்திய பரிசோதனையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படியும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி (இன்று) மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார். 

10.30மணிக்கு இததையடுத்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் சசிகலா டிஸ்சார்ஜ் ஆகிறார்.. கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சசிகலா வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள். 

இதனால் , அவர் உடனடியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. பெங்களூருவிலேயே சில நாட்கள் ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.