திமுக அரசு மக்களுக்கு கேட்காமலே உதவும்... மு.க.ஸ்டாலின்

 


திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது, நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். தாயை இழந்த பெண் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் மனு கொடுத்திருந்தார். 

உடனடியாக தி.மு.க. உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். ஸ்டாலின் செல்லும் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் குறைகளை பெற்று நிவர்த்தி செய்து வரப்பப்டுகிறது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக டுவிட்டரில் வெளிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது, 

நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும். திருவண்ணாமலையில், தாயை இழந்த பெண் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் மனு கொடுத்திருந்தார். உடனடியாக தி.மு.க. உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.