குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம்

 


வாலாஜாபாத் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம், ஊட்டச்சத்து உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ஏகனாம்பேட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது. 

வாலாஜாபாத் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி தலைமை தாங்கினார். 

தொண்டு நிறுவன பொது மேலாளர் பிரேம்ஆனந்த் கலந்துகொண்டு குழந்தைகளின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து விளக்கினார். மேலும் குழந்தைகளுக்கான சத்தான தானிய உணவு பொருட்களை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்கினார். 

தொடர்ந்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமில் வாலாஜாபாத் சுற்றியுள்ள அனைத்து கிராம குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தொண்டு நிறுவன நிர்வாகிகள் மோகனவேல், செல்வகுமார், ஊராட்சி செயலர் ஜீவரத்தினம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.