- தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு
___________________________________________
பிரபல தமிழ் எழுத்தாளர் மாதவன். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர்.
திருவனந்தபுரத்தில் பாத்திரக்கடை வைத்திருந்த இவர், ஏராளமான தமிழ் சிறுகதை, நாவல்களை எழுதியுள்ளார். 2009ல் இவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. ‘இலக்கிய சுவடு’ என்ற இவரது சிறுகதை தொகுப்புக்கு 2015ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
கிருஷ்ணபருந்து, புனலும் மணலும், யானை சந்தம், மாதவன் கதைகள் உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார். கடந்த வாரம் மூச்சு திணறல் ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.
___________________________________
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள்மாநில தேர்தல் ஆணையர் மாலிக்பெரோஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
***************
தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால்மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள் து.
***************
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
***************
ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
***************
சென்னை விமான நிலையத்தில் கடந்த 9 மாதங்களில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
***************
பெட்ரோல் விலை லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
***************
நாட்டின் சர்க்கரை உற்பத்தி அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 110.22 லட்சம் டன்னாக இருந்தது என்று இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
***************
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டத்தில் நண்பகல் 01.09மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்ட தாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
____________________________