ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி திமுக கட்சியில் இணைந்தனர்

 


ரஜினி மக்கள் மன்ற மாவட்டச்செயலாளர்கள் 3 பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில்  ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். 

இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. 

இந்நிலையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.குறிப்பாக ரஜினிக்கு நெருக்கமான தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் திமுகவில் இணைந்துள்ளார்.

மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலினின் சென்னை முகவரியில் தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் உள்பட மாவட்ட செயலாளர்கள் விலகி திமுகவில் இணைந்திருப்பது தமிழிக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்போன்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் திமுகவில் இணைந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா  எம்.பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தலைமைக் கழக சட்ட ஆலோசகர்கள் விடுதலை, என்.ஆர்.இளங்கோ எம்.பி, சட்டத்துறைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்,  சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி, திமுக மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர்பாபு மற்றும் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், இணைச் செயலாளர் ஷாஜகான் ஆகியோர் உடனிருந்தனர்.