வன்னியர் சமூக இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? துணை முதல்வர் ஓபிஎஸ் பதில்

 


சமூக வலைதளங்களில்  , ‘‘வன்னியர் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு வழங்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்” என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. 

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”வன்னியர் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.