த.மா.கா. மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்

 


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

மாரடைப்பால் மறைந்தார் த.மா.கா ஞானதேசிகன்.. சர்வ கட்சியினர், தொண்டர்கள் இரங்கல்..! 

71 வயதாகும் பி.எஸ்.ஞானதேசிகன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். 

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்து இரண்டு முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். 

2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 

ஜிகே வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது அவருடன் ஞானதேசிகன் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக செயல்பட்டு வந்தார்,