டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கிய விவசாயிகள்.



 மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினார். டெல்லி- ஹரியானா எல்லையான சிங்குவில் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அப்புறப்படுத்திவிட்டு  டெல்லியை நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், குடியரசு தினமான இன்று பிராமாண்ட டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

அதன்படி, இன்று ஒரு புறம் குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபுறம் விவசாயிகள் அறிவித்தபடி டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணி சிங்கு, காசிப்பூர், பல்வால், திக்ரி, ஷாஜகான்பூர் ஆகிய 5 பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.