விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்

 


தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கட்சி பொதுக் கூட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு  நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கட்சி துணை பொது செயலாளர், தேமுதிகவின் கூட்டணி மற்றும் பிரசார வியூகம் குறித்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் தேமுதிக தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் உள்ளது. 

தமிழகம் முழுவதும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்றும் கூறினார்.

தேமுதிக துணை பொது செயலாளர் சுதீஷ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ள நிலையில், அதிமுகவினர் தங்களை இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.