இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


வீட்டில் செல்வம் அதிகரிக்க செய்யும் குருபகவான் வழிபாடு பற்றிய பகிர்வுகள் :

எளிய முறையில் குருவை வழிபடுவது எப்படி?

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானவர் குருபகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார்.

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா…உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா..

 குருப் பகவானை வைத்து தான் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை ஒருவருடைய ஜாதகத்தில் கணிக்கப்படும். தனகாரகன், சந்தானகாரகன், சுபகாரகன் இது போன்ற பெயர்கள் குருபகவானுக்கு உண்டு.

 இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து வந்தால், வீட்டில் செல்வம் அதிகரிக்கும். வியாழக்கிழமை என்ன செய்தால் செல்வம் அதிகரிக்கும்.

 வியாழன் அன்று குருவை வணங்கி விரதம் இருக்கலாம். அன்றைய தினம் குருபகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர் அல்லது முல்லை மலரை வாங்கிச் சாற்றலாம். குருவுக்கு உகந்த கொண்டை கடலையை மாலையாகக் கட்டி போடலாம். 

மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து குருபகவானுக்குரிய ஸ்லோகங்களை சொல்லி வரலாம். இவ்வாறு ஒவ்வொரு வியாழனன்றும் தவறாது செய்து வருவோர் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வர்.

சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை படைத்து வணங்கி வந்தால், அதிர்ஷ்டமும், செல்வமும் வந்து சேரும்.

வியாழக்கிழமைகளில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்த பின், விளக்கேற்றி விஷ்ணு பகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.

வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதையேனும் படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளைத் தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழனன்று இதைச் செய்ய வேண்டும்.

 வியாழக்கிழமையில் வாழைப்பழத்தை தானம் வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.

அன்றைய தினம், மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணுவுக்குப் படைத்தால், விஷ்ணு பகவான் மகிழ்ந்து, வீட்டில் செல்வம் பெருகச் செய்வார்.

வியாழக்கிழமைகளில் ‘ஓம் நமோ நாராயணாய’ "ஓம் நமசிவாய" என்னும் மந்திரத்தை மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். இதனால் வீட்டில் தரித்திரம் நீங்கும். செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

பகிர்வு :மோகனா செல்வராஜ்