செய்திகள்...

 
தமிழ்நாடு தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20- அல்லது 21-ல் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை செயலாளர், டி.ஜி,பி., தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடதத்துவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையை அதிகாரிகள் அளிக்கும் அடிப்படையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

**********************************************உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார். திமுக மக்களவை உறுப்பினர் வில்சன் கடிதத்திற்கு  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றக்கோரி குடியரசுத் தலைவருக்கு எம்.பி.வில்சன் கடிதம் எழுதி இருந்தார்

****************************

டெல்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் ஜனவரி 25-ல் காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************************அசாமி மற்றும் அசாமி அல்லாதவர்கள், போடோ மற்றும் போடோ அல்லாதவர்கள் என்ற பெயரில் சச்சரவுகளைத் தூண்டுவதை தயவுசெய்து அடையாளம் காணவும் என உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் எங்கள் வளர்ச்சிக்காக அதைச் செய்யவில்லை, ஆனால் அரசியல் விளையாடுகிறார்கள் என அமித் ஷா தெரிவித்துள்ளார்