செய்திகள்

 அதிமுக பொதுக்குழுவில் பாஜ மீதான கடும் தாக்குதலை தொடர்ந்து இரு கட்சிகளிடையே மோதல் முற்றியுள்ளது. அமைச்சர்கள் சிலரும், கட்சியின் மூத்த தலைவர்களும் பாஜவை சீண்டி வருவது குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தமிழக தலைமை புகார் செய்துள்ளது. 

___________________________

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், இக்கட்சியின், மாநில பொதுச் செயலாளர் மவுரியா புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள். அலுவலக திறப்பு விழாவின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் 30க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். 

______________________

திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபைக் கூட்டம் 6 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு நடைபெறும்.

_________________________

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய பார்கவுன்சில் அறிவித்து இருப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறிய துடிக்கும் பாஜ அரசின் இத்தகைய செயல் கண்டனத்துக்கு உரியதாகும்.

கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜ அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்

___________________________________

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

சசிகலா விடுதலையாகி வருவதை எங்கள் சமுதாயம் மற்றும் அதிமுகவில் இருக்க கூடிய உண்மையான விசுவாசிகள் வரவேற்பார்கள். அவர் வருகையால் கட்சியில் பிரச்னைகள் ஏற்படுமா? என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஒருவேளை சசிகலா அந்த கட்சிக்கு உழைத்தது உண்மையென்றால், நிச்சயமாக அவர்களை பிடித்தவர்கள் அவர்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள் என்று அவர் கூறினார்.

___________________________

கொரோனா காலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை வசதி மட்டுமே அனுமதித்து இருப்பது வரவேற்க தக்கது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கூறினார். 

____________________________

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் இன்று மதியம் அமைச்சர்கள் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. ஆனால், வரும் சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலை தொடருமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளது.