முக்கியச் செய்திகள்

 


பயனாளர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி நீக்கப்படாது... வாட்ஸ்அப் விளக்கம்

புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், இதுவரை ஒப்புதல் வழங்காத பயனாளர்களின் கணக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி நீக்கப்படாது என விளக்கம் அளித்துள்ளது.

************************

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 17.01.2021 வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். மேலும் வருகின்ற 20ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாற்றப்படுகிறது.

**************************

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

**************************

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தீவிரம் முற்றிலும் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*************************

ஒரு வாரத்திற்கு பிறகு மழை குறைந்ததால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று 8,387 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

*********************
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரூ.14.5 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.3.25 கோடி கூடுதலாகும்.

**************************
அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு மூலம் ரூ.5.46 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

***********************
இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.