நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது
தமிழகத்தில் 17 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும்
இன்று தடுப்பூசி போடப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அறிவிப்பு
******************
புத்தாண்டுக்கு முந்தைய நாள் ரூ.160 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரி தகவல்
*******************
திண்டுக்கல் நந்தவனம் பட்டியில் உயிரிழந்த பெண் காவலரின் உடலை, உயிர்த்தெழுவார் என 22 நாட்கள் வீட்டில் வைத்து ஜெபம் செய்த பாதிரியார் சுதர்சன், பெண் காவலரின் அக்கா வாசுகி ஆகிய இருவரும் கைது
********************
போலி நீட் மதிப்பெண் சான்று விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மாணவியின் தந்தை பல் மருத்துவர் பாலச்சந்திரன் கைது!
*******************
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இதர டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சேர்ப்பு
* காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகிய நிலையில் இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
*********************
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி மலர்கொத்துடன் கடிதம் அனுப்பி புத்தாண்டு வாழ்த்து
**********************
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம்
* தமிழகத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் - ஸ்டாலின்
****************