கர்நாடகத்தில் லவ் ஜிகாத் தடை சட்டம்

 கர்நாடக மாநிலத்தில் லவ் ஜிஹாத்துக்கு எதிராக மாநில அரசு விரைவில் ஒரு சட்டத்தை அமல்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று பாஜக தலைவர் நளின் குமார் கட்டில் தெரிவித்தார்.

முதல்வர். எடியூரப்பா தலைமையிலான மாநில அரசு பசுவதை தடை சட்டம் கொண்டு வந்து ஏற்கனவே அமல்படுத்தி உள்ளது . இப்போது லவ் ஜிஹாத் கொண்டு வரப்படும்.

பெல்லாரி மாவட்டத்தில் ஹொசபெட்டையில் நடைபெற்ற பாஜக மாநில மகளிர் மோர்ச்சா நிர்வாகக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கு அநீதி ஏற்படுவதைத் தடுக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவில்லை என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், முதலமைச்சர் எடியூரப்பாவின் தலைமையிலும், மத்திய மாநில அரசுகள் அபிவிருத்தி செய்து வருகிறது. பெண்களின் பாதுகாப்பில் உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.

சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மோசடி இல்லாத மற்றும் அபிவிருத்தி சார்பு அரசாங்கத்திற்காக நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.