ஆன்லைன் ஆப் மூலம் கடன் - சட்ட விரோதமாக சீனாவுக்கு பணம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை விசாரணை

 


ஆன்லைன் ஆப் மூலம் கடன் வழங்கி சட்ட விரோதமாக சீனாவுக்கு 300 கோடி பணம் பரிமாற்றம்: அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது

லோன் ஆப் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் வசூலித்த ரூ.300 கோடி பணத்தை சட்ட விரோதமாக சீனாவுக்கு பரிமாற்றம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பெற்று சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கி உள்ளனர். 

முதற்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டுள்ள சீனர்கள் நடத்திய 25 ேலான் ஆப்களின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


கடன் ஆப் பெயர்கள்:


‘கேஸ் பீ, அரோரா லோன்,  ரேபிட் லோன், க்குயிக் லோக், ருப்பி லோன், கேஸ் மேப், மை கேஸ் போன்ற 25  ஆப்’களை சீனாவில் உள்ள ஹாங்க் என்பவர் நடத்தி வருகிறார்.