கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 18 கிமீ தூரம் சைக்கிளில் சென்றார்.
சாதாரண கவுன்சிலர் ஒருவரே சொகுசு காரில் பறக்கும் நிலையில், எம்எல்ஏ ஓருவா் சைக்கிளில் சென்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 26.01.2021 காலை டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்தும் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் நாகா்கோவிலில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 18 கிமீ தூரம் சைக்கிளில் சென்றார். பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட மணலியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் சைக்கிளில் சென்றார்.
அவருக்கு வழி நெடுகிலும் உள்ள பொதுமக்கள் ஆதரவு கொடுத்தனர். இந்த காலத்தில் சாதாரண கவுன்சிலர் ஒருவரே சொகுசு காரில் பறக்கும் நிலையில், எம்எல்ஏ ஓருவா் சைக்கிளில் சென்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கன்னியாகுமரி-களியக்காவிளை சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனோ தங்கராஜ் எம்எல்ஏ தக்கலையில் இருந்து நாகா்கோவில் கலெக்டா் அலுவலகம் வரை 17 கிமீ நடந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது