தேர்தல் பரப்புரை - ராகுல் காந்தியின் பயண விவரம் அறிவிப்பு

 காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வருகின்ற  23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.

தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி  பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தி வருகின்ற  23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மீண்டும் தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாட்கள்  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி ஈடுபடுகிறார்.