இரு வரி செய்திகள்..... உண்மை செய்திகள்

 





ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. மெல்போர்னில் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிசப் பண்ட் ஆகியோர் ஓட்டலுக்கு சென்றதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
______________________________

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த மாதம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
_____________________________________

புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது; கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

_____________________________

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

__________________________

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசுத் தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக , தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.