இன்றைய ராசிபலன்கள் - தை 7ஆம் தேதி ஜனவரி 20, 2021 புதன்கிழமை.

 


மேஷம்:

இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். 

ரிஷபம்:

சந்திரன் சஞ்சாரத்தினால் வியாபாரத்தில் லாபம் வரும். மாலை நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உறவினர்களால் ஓரளவு நன்மைகள் ஏற்படும். 

மிதுனம்:

குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலப் பலன் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. 

கடகம்:

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.. பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவி கரம் நீட்டுவர். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். 

சிம்மம்:

சந்திரன் சஞ்சாரம் பிற்பகலுக்கு மேல் சாதகமாக உள்ளது. இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளை இன்று ஒத்திவைக்கவும். 

கன்னி:

சந்திரன் எட்டாவது வீட்டிற்கு வருவதால் பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது. இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருக்கவும். 

துலாம்:

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். புதிய நபர் அறிமுகத்தினால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். 

விருச்சிகம்:

இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும். 

தனுசு:

சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இன்று உங்களின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தொழிலில் பெரிய முதலீடு கொண்டு தொடங்கும் காரியங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். 

மகரம்:

சந்திரன் சஞ்சாரம் முயற்சி ஸ்தானம், சுக ஸ்தானத்தில் உள்ளது. இன்றைய தினம் செய்யும் செயல்களுக்கு வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். உடல் ஆரோக்கியம் அக்கறை காட்டவும். 

கும்பம்:

சந்திரன் இன்றைய தினம் இரண்டு மற்றும் மூன்றாம் வீடுகளில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

மீனம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். பிற்பகலுக்கு மேல் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். இன்று உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மன அமைதி குறையும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண சுபமுயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்