விதிமீறல் மீறினால் திரையரங்குக்கு உரிமம் ரத்து... காவல் ஆணையர்

 


கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல மாதங்களுக்கு பின் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாட்டை மீறி செயல்படும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.