ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

 


5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 16-ம் தேதி நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக இந்தாண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

எதிர்பாராத வகையில் இந்தாண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்க நேரிட்டதாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஜனவரி 31-ம் தேதி ஞயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனை யாரும் அஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தேசிய நோய் தடுப்பு தினமாக கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் மூலம் மக்கள் பயனடைந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.