234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்- பிரேமலதா விஜயகாந்த்

 

கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என கூறுவது காலதாமதத்திற்கு வழி வகுத்துவிடும். தேமுதிக பொறுத்தளவில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளது.

சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். நான் ஒரு பெண் என்பதால் சசிகலாவை ஆதரிக்கிறேன். சசியாகலாவால் பலன் அடைந்தவர்கள் அவரை வேண்டாம் என கூறுவது வருத்தம் அளிக்கிறது.

மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் குறிப்பிட்ட கொள்கை நிலைப்பாட்டை அறிவித்து தங்கள் கூட்டணியை முன்னதாகவே வெளிப்படையாக அறிவிக்கின்றன. ஆனால், தேமுதிக ஒவ்வொரு தேர்தலிலும் எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணியை முன்பே முடிவு செய்யாமல் இப்படியே உதார்விட்டுப் பேரத்தை இழுத்துக்கொண்டு போனால் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்ளவேண்டும் என்று பார்க்கும் அனைவரிடமும் நிர்வாகிகள் கூறிவருகிறார்கள்

தேமுதிக மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் வலிமைக்கேற்ப இடங்களைப் பெற்றுக்கொண்டு, 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதே புத்திசாலித்தனம் என்று தொண்டர்களும் புலம்புகிறார்கள்.