2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் நடிகர்கள்- நடிகை

 தென்னிந்திய திரையுலகின் கலைஞர்களுக்கு வழங்கப்படக்கூடிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு 2020 ஆம் ஆண்டிற்கு நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. 

இந்நிலையில், இந்த வருடம் 2020 ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித்குமாருக்கு சிறப்பு விருதும், ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கும் வழங்கப்படுகிறது. 

சிறந்த படமாக இயக்குனர் செழியன் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும், 

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத் ரவிச்சந்திரனுக்கு வழங்கப்படுகிறது. 

இதேபோன்று மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.