இன்றைய ராசிபலன்கள் 15/01/2021

 


மேஷம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு அற்புதமான நாள். சகோதரர்களின் உதவி தேடி வரும். மனதிலும் உடலிலும் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். உங்க வீட்டில் இன்று சுப காரியங்கள் நடைபெறும். பிற்பகலுக்கு மேல் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும் வருமானம் பெருகும்.

ரிஷபம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பாக்யங்கள் பெருகும் நாள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். இன்று பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் சகோதரர்களிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். 

மிதுனம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செல்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உணவு விசயத்தில் கவனமாக இருங்க. சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. 

கடகம்: 

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். 

சிம்மம்: 

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். முதலீடுகளை தவிர்க்கவும். 

கன்னி: 

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். 

துலாம்: 

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன் பிரச்சினை குறையும் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்களை அனுசரித்து செல்லுங்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். 

விருச்சிகம்: 

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். 

தனுசு: 

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று தொழில் ரீqதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடையலாம். பணபற்றாக்குறை ஓரளவு குறையும். உறவினர்களின் உதவி தேடி வரும். 

மகரம்: 

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். சந்திரன் சனி சேர்க்கையால் புனர்பூ தோஷம் வந்துள்ளது. குரு சந்திரன் இணைந்துள்ளதால் குரு மங்கள யோகமும் கூடி வந்துள்ளது. இன்று உங்களுடைய குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகமாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். 

கும்பம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் விரைய செலவுகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கோபத்தை குறைத்துக் கொண்டு பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். வியாபாரத்தில் சிறிய தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். 

மீனம்:

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எடுத்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். செய்யும் தொழில் :மூலம் லாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும்.