திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி – மனு விசாரணை

 


தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து  தொடரப்பட்ட மனு இன்று விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. 

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகள் உடன் 100% இருக்கைகளை வைத்து திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 

இதற்கு விஜய், சிம்பு, உட்பட நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் திரையரங்கில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்று விசாரிக்க உள்ளனர்.