ராயபுரத்தில் மினி கிளினிக் தொடங்கினார் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி

 

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் 14-12-2020 இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி k.பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார்.


இரண்டாயிரம் மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். உரையின் போது அவர் கூறியதாவது:- நாட்டிலேயே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது

 அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி சாதனை படைத்துள்ளோம். மருத்துவக் கல்லூரிகளை அதிகரித்ததன் மூலம் 5,300 பேர் மருத்துவம் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ரூ.120 கோடியில் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் தனியார் மருத்துவமனைகளைவிட உயர்தர சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் வழங்கி வருகின்றன என முதலமைச்சர் தெரிவித்தார்.

 அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் வேலுமணி ஜெயக்குமார் சரோஜா விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் சண்முகம்இ.ஆ.பா சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்இ.ஆ.பா.Dme  டாக்டர் நாராயண பாபு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நிலைய மருத்துவர் டாக்டர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்