மேலும் செய்திகள்

 சென்னையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் சரக உதவி ஆணையர்கள், 12 மாவட்ட துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள 35 மகளிர் காவல் நிலையங்களும் ஒரு துணை ஆணையரின் செயல்படும் என 2019-ல் அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மீண்டும் சரக உதவி ஆணையர்கள் அந்தந்த மாவட்ட காவல் துணை ஆணையர்கள் கீழ் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

-----------------------------------

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,107 கன அடியாக குறைந்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.57 அடியாகவும், நீர் இருப்பு 73.61 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

________________________

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கன அடியில் இருந்து 424 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம்  94.57 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 24.6 டிஎம்சி, அணையில் இருந்து 2,350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

_______________________

குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

___________________________________

வீராணம் ஏரிக்கு நீர் வரத்து 54 கன அடியாக உள்ளது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியில், நீர் இருப்பு 46.27 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 54 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.