இந்தியா-பங்களாதேஷ் இடையே ராணுவ மாநாடு நாளை முதல் தொடக்கம்

 


இந்தியா-பங்களாதேஷ் இடையிலான ராணுவ தரப்பிலான மாநாடு, வரும் செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் குவஹாத்தியில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் எல்லைக் காவலர் பங்களாதேஷ் (BGP) இடையிலான 51 வது எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை குவஹாத்தியில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு இந்திய தரப்பில் பி.எஸ்.எஃப் தூதுக்குழுவுக்கு இயக்குநர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா தலைமை தாங்குவார் எனவும், பங்களாதேஷ் தரப்பில் பிஜிபி தூதுக்குழு படைகளின் தலைமை மேஜர் ஜெனரல் எம்.டி. ஷபீனுல் தலைமை தங்குவார் என கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பல்வேறு குற்றங்களை எவ்வாறு கூட்டாகக் கட்டுப்படுத்துவது என்றும், எல்லைக் காவல் படைகளுக்கு இடையில் சரியான நேரத்தில் தகவல்களைப் பகிர்வது குறித்த வழிமுறைகளை உரையாற்றுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.