அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறை மீறல் - அரசு பதில் தர ஹைகோர்ட் ஆணை

 
ஆளுங்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும், முக கவசம் அணிய வேண்டும் எனவும், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ..க்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனுவுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதார துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மை மைய தலைவருக்கு உத்தரவிட்டனர்.