திருவண்ணாமலையில் மலை மீது ஏறி தீபத்தை தரிசித்த சஞ்சிதா ஷெட்டி

 


திருவண்ணாமலையில் மலை மீது ஏறி தீபத்தை தரிசித்த சஞ்சிதா ஷெட்டி - வைரலாகும் புகைப்படம்

திருவண்ணாமலை: மலை மீது தீப வடிகாக காட்சி தரும் அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. அந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாளில் தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி தீப விழா கொண்டாடப்பட்டது. மலைமீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மலைமீது 11 நாட்கள் தீபம் ஏற்றப்படும். இதனை பலரும் தரிசனம் செய்து வருகின்றனர். 

சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி 2761 அடி மலைமேல் ஏறி திருவண்ணாமலை தீபத்தை தரிசனம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள சஞ்சிதா ஷெட்டி "திருவண்ணாமலை, அதிசய மலை ஏறும் உயரம்: 2671 அடி. அருணாச்சல மலை ஏறியது எனக்கு உண்மையிலேயே அதிசயம்.

மலையின் உச்சம் வரை செல்ல 1 மணி 40 நிமிடங்கள். மலையிலிருந்து கீழே இறங்க நேரம் 2 மணி 30 நிமிடங்கள். (ஓய்வு எடுப்பது உட்பட) 

இந்த ஆசீர்வாதங்களுக்கு கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.