காசிமேட்டில் மீன்பிடி விசைப் படகு, தீப்பற்றி எரிந்து நாசம்

 காசிமேட்டில் மீன்பிடி விசைப் படகு, தீப்பற்றி எரிந்து நாசம்


விசைப்படகில் 6 ஆயிரத்து 500 லிட்டர் டீசல் இருந்த நிலையில், டீசல் குழாய் விரிசல் ஏற்பட்டு எரிபொருள் கசியத் தொடங்கியதால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது.


ராயபுரத்தில் இருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.


படகின் மதிப்பு சுமார் 60 லட்சம் என்றும், அதை தயார்படுத்தியதற்கு செலவிட்ட தொகை, ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப்பொருட்கள் என 75 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.