நாகூர் தர்காவில் ஆய்வு செய்கிறார் முதல்வர் பழனிசாமி

 


புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிச்சாமி  நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.இதன் விளைவாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளது.

குறிப்பாக கடலூர்,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகள் அதிகம் உள்ளது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மீட்பு பணிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புயல் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக  முதலமைச்சர் பழனிச்சாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.   

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகை : நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்

நாகூர் தர்காவில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார்