எம்.ஜி.ஆர்-ரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்

 


கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர்  அழைக்க மறுக்கிறார். சுயநலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை அவர் பயன்படுத்துகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் பற்றி பேச அதிமுகவின் வாக்குகளை பெற கமல் முயற்சிக்கிறார் என்றும், எம்.ஜி.ஆர்-ரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கமல் எம்.ஜி.ஆரை புரட்சித்தலைவர்  அழைக்க மறுக்கிறார். 

சுயநலனுக்காகவும், சந்தர்ப்பத்துக்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை அவர் பயன்படுத்துகிறார். கலாச்சார சீரழிவு, குடும்ப சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசன் மக்களுக்கு எப்படி நல்லது செய்வார் என விமர்சித்துள்ளார்.