தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

 


நீங்கள் தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். 

தமிழ்நாட்டில் 3 கோடிக்கும் மேலான அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன.

இதுகுறித்து அஞ்சல் துறை தெரிவித்துள்ளதாவது:

இந்த ஆண்டு குறைந்தபட்ச கட்டணத்தை தபால் அலுவலக கணக்கில் வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. ஒரு தபால் அலுவலக கணக்கில் குறைந்தது ரூ.500 வைத்திருப்பது கட்டாயமாகும். 

இது குறித்து இந்தியா போஸ்ட் ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த தகவலின் படி, தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் குறைந்தது ரூ.500 வைத்திருக்க வேண்டும். 

தற்போதைய விதி:

இந்தியா போஸ்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சேமிப்புக் கணக்கில் ரூ.500 குறைந்தபட்ச நிலுவைத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், ஆண்டுக்கு ரூ.100 பிடித்தம் செய்யப்படும், மேலும் கணக்கில் இருப்பு இல்லை என்றால், கணக்கு தானாக மூடப்படும்.

வட்டி விகிதம்:

சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதம் 4 சதவீதமாகும். வட்டி மாதத்தின் 10-ம் தேதி முதல் மாத இறுதி வரையிலான குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

எனவே கணக்கின் இருப்பில் 10-ம் தேதி முதல் மாதத்தின் கடைசி நாள் வரை ரூ.500 க்கு குறைவாக இருந்தால் அந்த மாதத்தில் வட்டி அனுமதிக்கப்படாது.