விவசாயிகளுக்கு ஆதரவாக, 05.12.2020) நடைபெறும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தால், டில்லி போல தமிழகம் குலுங்கட்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கட்சி தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: வேளாண் சட்டத்திற்கு எதிராக, டில்லியில் போராடும் விவசாயிகளுக்கும், தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும், தார்மீக ஆதரவு தரும் வகையில், 05.12.2020 தமிழகம் முழுதும், தி.மு.க., சார்பில், கறுப்புக் கொடி போராட்டம் நடக்கிறது.
சேலத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும். தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும். டில்லி போல குலுங்கட்டும், தமிழகம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.