புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும்ரத்து செய்யப்பட்ட பின்னர் குழு அமைக் கப்படுவது தான் பொருத்தமானதாக இருக்கும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வீடியோ மூலம் செய்தியாளர்கள் கூட்டம்நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா மற்றும் நிர்வாகிகள் விஜு கிருஷ்ணன், கிருஷ்ணபிரசாத், கே.கே.ராகேஷ் அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள், தில்லியில் போராடும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்தமனுவின்மீது, விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்வதற்கு அரசமைப் புச்சட்டத்தின்கீழ் உரிமை பெற்றிருக்கிறார்கள் என்று உத்தரவு பிறப்பித்துள்ள பின்னணியில், பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரை வீரத்துடன் எதிர் கொண்டு, திறந்தவெளியில், இரவும் பகலும் உட்கார்ந்துகொண்டிருக்கும் கொடுமையான நிலைமையை மனிதாபிமானமான முறையில் பரிசீலனை செய்து, உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்திவைத்திருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தையும், விவசாயிகளையும் ஒருநிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்த அனுமதித்திருக்க வேண்டும் என்றும், அதன்மூலம் பிரச்சனையைத் தீர்த்திட முயற்சித்திருக்க வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருதுகிறது