தமிழக பேருந்துகள் ஓடாது

 


இன்றைய தினம் (டிசம்பர் 3) அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கு வேலைநிறுத்த அறிவிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்க தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது

இதன் தொடர்ச்சியாக 14, 15 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும்.

பின்னர் வரும் 17ஆம் தேதிக்குள் தமிழக அரசும், போக்குவரத்து துறையும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண கெடு விதிக்கப்படும். 

 இல்லையெனில் டிசம்பர் 17ஆம் தேதியோ அல்லது அடுத்த ஆறு வாரங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு பேருந்துகளையே ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டால் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளின் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த மாதம் தீபாவளியை ஒட்டி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். எனவே தமிழக அரசு மிகவும் கவனமாக காய்களை நகர்த்தும் என்று கூறப்படுகிறது.