தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

 
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  சென்னை எழும்பூரில் இருந்து பீகார் மாநிலம் கயாவிற்கு செல்லும் பண்டிகை கால சிறப்பு  ரயில் சேவை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. மேலும் எழும்பூருக்கு பதிலாக  சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். அதன்படி கயா - சென்ட்ரல் - கயா (02389, 02390) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜனவரி 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் இயக்கப்படும்.


தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின்6 கோட்டங்களில் நேற்று ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு முன்னர் 592 குறைகள் பெறப்பட்டன.  இதில் 300 குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.  இன்று (நேற்று) 154 ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இவ்வாறு, தெற்கு ரயில்வே முழுவதும், மொத்தம் 746 குறைகள் பெறப்பட்டு, 358 தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.