செய்திகள்

 


சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

________________________

நடராஜன் டி-20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

________________________

போர்ப்ஸின், உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது இடம் பிடித்துள்ளார்.

_______________________

சென்னை புறநகர் ரயிலில் கல்லு}ரி மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹhசன் வலியுறுத்தியுள்ளார்.

___________________

 டெல்டா மாவட்டங்களில் மழை சேதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

__________________

 3-ம் ஆண்டு கல்லு}ரி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

__________________

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

_____________________

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராடி வரும் விவசாயிகளுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

____________________

ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை இழந்திருந்தாலும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்காக மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

____________________

தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வரும், புறப்படும் நேரங்களை பயணிகள் சரிபார்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

___________________

17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்தீவ் படேல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

___________________

கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே, கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணமாக, வழங்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

___________________

 அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சு ரப்பா, தம் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.