இரு வரி செய்திகள்..... உண்மை செய்திகள்

 


காலவரையின்றி நிறுத்தம்:

சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

____________________________________

சாமாந்தான்பேட்டை கிராமத்திற்கு மீன் இறங்கு தளம் அமைத்து தர வலியுறுத்தி 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

___________________________

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும், டிசம்பர் 28ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

________________________________

பிரெஞ்ச் கலாச்சாரத்தோடு இணைந்துள்ள புதுச்சேரியில் விதிகளுக்குட்பட்டு புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

_____________________________


இங்கிலாந்துடனான எல்லையை பிரான்ஸ் மூடியதையடுத்து ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டதால் 10,000-க்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.

__________________________


நாகலாந்து மாநிலத்தின் மோகோக்சுங்க் என்ற இடத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

_______________________


புத்தாண்டு பரிசாக 17 திட்டங்களின் நன்மைகளை எம்ஜிஎன்ஆர்இஜிஏ எனப்படும் நூறு நாள் வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.