மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டமும் இன்று நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 27 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று டெல்லியில் பல்வேறு நெடுஞ்சாலைகளை மறித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
_______________
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 10-01-2021 வரை நீட்டித்துள்ளது. இதனை தொடர்ந்து புனித பயணிகள் 10-01-2021 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 10.1.2022 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உறைத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது ஹஜ் 2021-ல் கொச்சின் புறப்பாட்டு தளத்தில் இருந்து அஸிஸியா தங்குமிட வகைக்கு ரூ.3,56,433.40 செலவினமாகும் என மும்பை, ஹஜ் குழு தெரிவித்துள்ளது. குழு இணைய முகவரி (www.hajcommittee.gov.in.) தொடர்பு கொள்ளலாம்.
________________________________
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களும் ஜனவரி 18 முதல் வழக்கம்போல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆர்.பூர்ணிமா (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும்
_________________________________