செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்த்திக், விஜயா, ஆனந்த் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, விதிமீறி அதிக பாரம் ஏற்றிவந்தது, ஷேர்ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி வந்தது, வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வந்தது, சொகுசு கார், சரக்கு வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தி இருந்தது என 170 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.