செய்திகள்

 



புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

______________________

 பனிமூட்டம் காரணமாக இன்று முதல் வருகின்ற 31-ந்தேதி வரை சேலம்-சென்னை விமான சேவை இயக்க நேரத்தில் மாற்றம் செய்வதாக ட்ரூஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

_______________________

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தித் தரப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்ஹh தெரிவித்தார்.

_______________________

 இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி நீளமான ஓவியத்தை வரைந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

_______________________

 2021ம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு மார்ச் 21-ம் தேதி நடைபெறும் என்று இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

_________________________

 தேவையற்ற மின்வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் மின் விநியோக கழகங்களும், மின் வாரியங்களும் நுகர்வோருக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

___________________________

 அமெரிக்காவின் மிக உயரிய விருதான லிஜியன் ஆஃப் மெரிட் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

___________________________

 2018-ல் விருதுநகரை சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

_________________________

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 1,805 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

________________________

கடலு}ர் மாவட்டம் சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்துகொள்ள வெளியு ர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

___________________________

ஆந்திரப்பிரதேசம் திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏழுமலையானை தரிசிக்க உள்ள ர் பக்தர்களுக்கு தினமும் 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி தெரிவித்துள்ளார்.