ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு கொரோனா!

 


நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாகவும் கருத்து தெரிவித்ததாகவும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு சமீபத்தில் சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது       

டிசம்பர் இரண்டாம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்த நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் தற்போது அவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது