முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - ஊழல் புகார்கள் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு

 மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், கழக பொதுச் செயலாளர் திரு துரைமுருகன், கழகப் பொருளாளர் திரு டி.ஆர். பாலு, கழக துணை பொதுச் செயலாளர் திரு ஆ. இராசா எம்.பி, கழக அமைப்புச் செயலாளர் திரு ஆலந்தூர் பாரதி எம்.பி, கழக செய்தி தொடர்பு செயலாளர் திரு டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து முதலமைச்சர் திரு பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.


முதற்கட்டமாக முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து - மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது.