வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதைத் தடுக்க குழு அமைப்பு- அரசாணை

 




கொள்முதல் நிலையங்களில், வியா பாரிகள் நெல் கொள்முதல் செய்வதைத் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் புல்லப்பநாய்கன் பாளையம், கள்ளிப்பட்டி, நஞ்சைப்புளியம் பட்டி, கூகலூர், புத்துக்கரைப்புதூர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தமி ழக அரசின் சார்பில் நெல்கொள்முதல் நிலை யங்கள் திறக்க அரசாணை வெளியிடப் பட்டது.

நெல் கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் யாராவது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லினை அதிகாரிகள்  விற்பனை செய்ய துணைபோனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.