முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி

 



தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.


நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். டிசம்பர் 31-ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிடள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தமிழர்களுக்காக தனது உயிரே போனாலும் பரவாயில்லை சந்தோஷம் தான் என ரஜினிகாந்த் கூறினார்.


இதையடுத்து, கட்சி தொடங்கும் பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பூத் கமிட்டி அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் சேர்ப்பது போன்ற பணிகளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


இந்நிலையில், மாற்றுக் கட்சியில் இருப்பவர்கள் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து கட்சியிலும் ரஜினி ரசிகர்கள் உள்ளனர். மாற்றுக் கட்சியில் உள்ள பலரை பல ஆண்டுகளாக அழைத்து கட்சி தொடர்வது குறித்து ஆலோசித்து உள்ளார்.


இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டோர் ரஜினியின் புதிய கட்சியில் இணைய உள்ளதாக உளவுத்துறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.