செய்திகள்

 

சென்னை தியாகராயர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்றப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த பட்டாசில் திடீரென தீ பற்றியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

________________________


நாமக்கல்லில் முட்டை கொள் முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ. 4.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ. 4.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

__________________________

போடி: பிள்ளையார் அணையில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக பிள்ளையார் அணையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

______________________

தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, மயிலாடுதுறையில் மிதமான மழை பெய்து வருகிறது.