செய்திகள்

 


நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

___________________________

நடிகர் ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில், தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

__________________________________

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத், ரமேஷ் இழப்பீடு வழங்க கோரி ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.


_______________________________

ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் தவிர்த்து வந்ததால் திருத்தணி முருகன் கோவில் மலைப்பகுதி மற்றும் கீழே இருந்த 68 கடைகளையும் அதிரடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் நேற்று திருத்தணி முருகன் கோவில் மலைப்பகுதி மற்றும் கீழே இருந்த 68 கடைகளையும் அதிரடியாக மூட உத்தரவிட்டனர்.